1,662 ViewsMonkey King என்பது இவருக்கு வைக்கப்பட்ட பெயர். எந்தப் பாதுகாப்பு அணிகலன்களும் இல்லாது மிக உயரமான மலையேறும் வீரர்களில் இவருக்கு முதலிடம் கூட கொடுக்கலாம்.
தமிழ்நாட்டின் குக்கிராமம் ஒன்றில் பிறந்து, இளம் வயதிலேயே கோயில் ஒன்றில் அனாதரவாக கைவிடப்பட்ட ஜோதி ராஜ் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து இப்பாரிய கற்குவியல் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.
குரங்கைப் பார்த்து அதே போன்றே கற்பாறையில் ஏறியுள்ளார். உச்சிக்கு சென்ற போது, அங்கு அக்கோவிலை பார்க்கவந்த சுற்றுலாப் பயணிகள், இவருடைய திறன் கண்டு வியந்து, உண்மையில் நீங்கள் ஒரு மலையேறும் சாம்பியனா என வினாவி உற்சாகப்படுத்தியுள்ளனர். அன்றிலிருந்து ஜோதி ராஜின் வாழ்க்கை மாறிவிட்டது.