10,563 Viewsதென் கொரிய நாட்டைச் சேர்ந்த 35 வயது பாப் இசைப்பாடகரான PSY எனும் ஜே-சேங் பாப் பாடல்களை பாடி உலக புகழ் பெற்றார். கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான பாடல் தான் 'கங்னம் ஸ்டைல்'.
உலகில் மூலை முடுக்கெல்லாம் சென்று சக்கை போடு போட்ட அந்த பாடலை இதுவரை யூ-டியூப் வலைத்தளத்தில் 200 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். யூ-டியூப்ல் இதுவே முதல் இடம் பிடித்துள்ளது.
பி.எஸ்.ஒய் தற்போது புதிய பாடல் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் நேற்று வெளியிட்ட அந்த பாடலை இதுவரை யூ-டியூப்ல் 32 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகது.